அமமுகவிற்கு இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என அதிராம்பட்டினம் அமமுக தொழினுட்ப பிரிவு இணைச் செயலாளர் முஹம்மது ஜாவித் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த புரட்சிதலைவி அம்மா அவர்கள் இட்டுச்சென்ற பணிகளை சின்னமாவின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் செல்வர் TTV தினகரன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் அரசு அம்மாவின் கொள்கைக்கு மாற்றமாக பாஷிச பாஜகவின் அடிவருடியாக செயல்படுவதை நன்கறிவோம். அம்மாவின் கொள்கையை காற்றில் பறக்கவிட்ட இவர்களின் கொள்கை பிடிப்பு எவ்வாறு உள்ளது என மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். இளைஞர்கள் போராட்டத்தால்தான் பாரம்பரியமிக்க ஜல்லிகட்டு மீட்கப்பட்டது. அதே ஒரு புரட்சி போராட்டத்தை உங்களின் ஒரே ஒரு வாக்கு மூலம் அம்மாவுக்கு துரோகமிழைத்த அதிமுக,பாஜகவின் கொள்கையற்ற கூட்டனியை முறியடிக்க அமமுக கூட்டனி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என ஜாவித் இளைஞர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
More like this
தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...
அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...