அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 22/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் SSMG அதிரை அணியினரும் புதுக்கோட்டை அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணியும் இறுதி வரை கோல் அடிக்கவில்லை. இதனால் இன்று நடைபெற்ற ஆட்டம் நாளை மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய(23/06/2019) தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :
கெளதியா 7s நாகூர் – ப்ளூஸ் கோட்டையூர் வேலங்குடி
அதிரை SSMG – புதுக்கோட்டை