Wednesday, May 15, 2024

நினைத்த நேரத்தில் கார் ஓட்ட முடியாது… கடுமையான காற்று மாசுபாட்டால் டெல்லி அரசு எடுத்த அதிரடி முடிவு !

Share post:

Date:

- Advertisement -

டெல்லியில் காற்று மாசுபாடு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், ‘கார் ரேஷன்’ நடைமுறையை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

டெல்லியில் வாகனப் போக்குவரத்தை குறைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆட்-ஈவன் (Odd-Even) என்ற இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இன்று ஆரம்பித்து உள்ள இந்த கெடுபிடி வரும் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

●அதாவது வாகனங்களின் பதிவு எண், 2, 4, 6, 8 போன்ற இரட்டைப் படை (Even) எண்களில் முடிவடைந்தால் அந்த வாகனங்களை, Even நாட்களில் மட்டுமே சாலையில் ஓட்ட முடியும்.

●3, 5, 7, 9 போன்ற ஒற்றைப்படை (Odd) எண்களில் முடிவடைந்தால் அந்த கார்கள், அதுபோன்ற தினங்களில் தான் சாலையில் இயங்க முடியும்.

●இந்த விதிமுறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விதிவிலக்கு.

●அதேநேரம் இருசக்கர வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தாது. அதேபோன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நெறிமுறை பொருந்தாது.

●2016ம் ஆண்டில் இது போன்ற ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது எரிவாயு சிலிண்டர் மூலமாக இயங்கக்கூடிய கார்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டது, ஆனால் இப்போது எரிவாயு மூலம் இயங்கக்கூடிய வாகனங்களுக்கும் விலக்கு கிடையாது.

●அரசின் இந்த விதிமுறையை மீறி இயங்கக்கூடிய வாகனங்களுக்கு ரூ.4000 வரை அபராதம் விதிக்கப்படும்,
இதில் மற்றொரு சலுகையும் செய்யப்பட்டுள்ளது.

●ஒருவேளை தவறான பதிவு எண் இருந்தால் கூட பெண்கள் மட்டுமே காரை இயக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. கூடவே ஆண் யாராவது அமர்ந்திருந்தால் அப்போது அபராதம் கேரண்டி.

●மேலும் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடிய தனியார் பஸ்களும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற விஐபிகளுக்கு இதில் விலக்கு உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...