Sunday, May 19, 2024

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது பாலியல் புகார் கூறியவருக்கு மீண்டும் பணி ஆணை..!

Share post:

Date:

- Advertisement -

தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த கோகோய் முயன்றதாகவும் அதைத் தவிர்த்த காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த கோகோய் முயன்றதாகவும் அதைத் தவிர்த்த காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். அவர் பணியில் இல்லாத இடைப்பட்ட காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளமும் தரப்பட்டதாகத் தெரியவருகிறது.

கோகாய் மீது புகார் தெரிவித்த நிலையில் குறிப்பிட்ட அந்த ஊழியர் உச்ச நீதிமன்றத்திலேயே துறை மாற்றப்பட்டார். பிறகு, பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு, அந்த ஊழியரின் கணவர் மற்றும் கணவரின் சகோதரர் மீது டெல்லி போலீஸ் வெவ்வேறு காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்தது. தன்னையும் தங்களது குடும்பத்தையும் அச்சுறுத்தவே நீதிமன்றம் இப்படிச் செய்வதாக அந்த ஊழியர் புகார் கூறியிருந்தார்.

நன்றி விகடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....