Sunday, February 1, 2026

நடிகர் ரஜினியுடன் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்திப்பு !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

சி.ஏ.ஏ. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினிகாந்த் மீது சிறுபான்மை மக்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். அப்போது CAA, NRC, NPR சட்டங்களினால் ஏற்படும் பாதகங்களை ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் விளக்கினர்.

ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் மௌலவி. காஜா முயீனுத்தீன் பாகவி, மௌலவி. அன்வர் பாதுஷாஹ் உலவி, மௌலவி. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, மௌலவி. அப்துல் அஜீஸ் பாகவி, மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சிஏஏவை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து ரஜினிகாந்திடம் விளக்கினோம். அவரும்புரிந்துகொண்டார். நாட்டில் அமைதியை உருவாக்க என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என உறுதியளித்தார் ரஜினிகாந்த் என்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img