Thursday, March 19, 2026

புழல் சிறையில் உள்ள முஸ்லீம்களுக்கு நோன்பு வைக்க நடவடிக்கை வேண்டும் – இந்திய தேசிய லீக் வலியுறுத்தல் !

spot_imgspot_imgspot_imgspot_img

புழல் சிறையில் உள்ள முஸ்லீம்களுக்கு நோன்பு வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்திய முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ஏதாவது பிரச்சனை என்றால் குறிப்பிட்ட துறை அதிகாரிகளை அலை பேசி மற்றும் வாட்ஸ் அப் மூலம் சம்பந்தபட்ட சமூக பிரச்சினைகளை தகவலாக கூறும்போது அந்த அதிகாரிகள் உடனே அந்த பிரச்சினை சரி செய்வது இயல்பான நிலை.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணம் காட்டி சென்னை புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை முஸ்லீம் சிறைவாசிகள் உட்பட விசாரணை கைதிகள் மற்றும் வெளிநாட்டினர் (தப்லீக் ஜமாஅத்) நோன்பு வைக்க எந்த ஏற்பாடுகளும் செய்யாமல் சென்னை புழல்-1 சிறை கண்காணிப்பாளர் மறுத்து வருகிறார்.

காலம் காலமாக தமிழக அரசின் உத்தரவோடு சிறைவாசிகளுக்கு ரமலான் மாத காலங்களில் அவர்கள் நோன்பு வைக்க ஏதுவாக சிறை விதியை பின்பற்றி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது தொடர்ந்து வந்த நிலையில் தற்போது நோன்பு கஞ்சி , பழ வகைகள் உட்பட எந்த ஏற்பாடுகளும் செய்து கொடுக்காமல் இருக்கும் புழல்-1 சிறை கண்காணிப்பாளர் அவர்களை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு உடனே தலையிட்டு புழல் சிறை அதிகாரிகளின் இந்த கொடூர செயலை கண்டிப்பது மட்டுமில்லாமல் சம்மந்தப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட அனைவருக்கும் நோன்பு வைக்க அத்துணை வசதிகளையும் செய்து கொடுக்க கோருகிறோம்.

ரமலான் மாத தொடக்கத்திலிருந்தே அதிகாரிகளிடத்தில் , ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முதல் விசாரணை சிறைவாசிகள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட ஏனையோர்க்கு ரமலான் நோன்பு வைப்பதற்கு எப்போதும் போல தகுந்த ஏற்பாடு மற்றும் பழங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி பலமுறை கூரியும் இதுவரை எந்த பலனும் இல்லை….

பால் திரிந்ததால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதற்கு இவர்கள் ஒன்றும் நடிகர் S.Ve சேகர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதையும் நாங்கள் அறிவோம் ஆகையால் சம்மந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு நோன்பு வைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தமிழக அரசை லியுறுத்தியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img