Sunday, February 1, 2026

திமுக கூட்டணியில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்து தொகுதி பங்கீடு முடிக்கப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பன குறித்த பேச்சுவார்த்தை இன்று முதல் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே மதிமுகவுக்கு 6 தொகுதிகள், ஆதித்தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி மதிமுக மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளிலும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உசிலம்பட்டி தொகுதியிலும், ஆதித்தமிழர் பேரவை கட்சி அவிநாசி தொகுதியிலும், மக்கள் விடுதலை கட்சி நிலக்கோட்டை தொகுதியிலும் போட்டியிடுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img