Friday, March 20, 2026

வீட்டில் ஒருவருக்கு வேலை.. கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் – அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.ம.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தேசிய தலைவர் ஓவைசி, எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.இ.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்ட கூட்டணி, தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கையை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். இதில் 100 தலைப்புகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் விவரம் வருமாறு:-

  • மாதம் ஒரு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் நேரடியாக பங்கேற்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
  • அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும். குறைந்தபட்சம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படும்.
  • மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும்.
  • தமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும்.
  • வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டம் ‘அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் சட்ட மேலவை மீண்டும் உருவாக்கப்படும்.
  • தண்டனைக்காலம் முடிந்து சிறையில் வாடும் இஸ்லாமியர் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5% இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த நடவடிக்கை
  • ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
  • கியாஸ் சிலிண்டருக்கு தலா ரூ.100 மானியம் வழங்கப்படும்.
  • 45 வயது வரையிலான ஆண்களுக்கும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். பணிக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்கண்டவை உள்பட ஏராளமான வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img