Saturday, September 13, 2025

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் நீக்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமாக இருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நிலோபர் கபீல் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலோபர் கபீல் அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பு, திருப்பத்தூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை கட்சியில் வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீட் மறுப்பும் அதிருப்தியும்.. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிலோபர் கபீலுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால், அவர் அதிருப்தியில் இருந்தார். இருப்பினும் தேர்தலில் ‘சீட்’ மறுக்கப்பட்டாலும் கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரின் வெற்றிக்கு நிச்சயம் உழைப்பேன் என வெளியில் கூறிவந்தார்.

ஆனால், “திருப்பத்தூர் அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டே எனக்கு சீட் தரக்கூடாது என கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ரகசிய உடன்பாடு உள்ளது. அவர்களுக்கு ‘மாமன்’, ‘மச்சான்’ உறவு இருப்பது தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்று பேசினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்து கட்சித்தலைமை அவர் மீது அதிருப்தியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அவரை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img