Sunday, February 1, 2026

சான்றிதழ்களுக்கு ஜி.எஸ்.டி கட்டணம் – அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரியை அனைத்து விஷயங்களிலும் புகுத்தியிருக்கிறது ஒன்றிய அரசு. இந்த நிலையில், கல்வியிலும் ஜி.எஸ்.டி.யை கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம். இனி, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஜி.எஸ்.டி. கட்டணமாக 18 சதவீதம் செலுத்த வேண்டும் என அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன்.

அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களுடைய கல்விக் கட்டணம், செமஸ்டர் கட்டணம், டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம், தர வரிசை, ப்ரவிசனல் சான்றிதழ் பெறும் கட்டணம் தவிர, பட்டப்படிப்பு முடிந்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறும்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், டூப்ளிகேட் சான்றிதழ் பெறுதல், இடமாற்று சான்றிதழ் பெறுதல், சான்றிதழின் உண்மைத் தன்மை சான்றிதழ் பெறுதல், செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img