Friday, March 20, 2026

உச்சநீதிமன்றம், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு புகாரை அனுப்பிய அதிரை எக்ஸ்பிரஸ்!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய அரசியலமைப்பு வழங்கி இருக்கும் கருத்துரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை காவல்துறையை பயன்படுத்தி ஒடுக்கும் முயற்சியில் அதிரை உள்ளூர் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக ஆர்வலர்களை காவல்துறையை பயன்படுத்தி மிரட்டி வந்த உள்ளூர் திமுக, தற்போது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தையும் அடக்கி ஒடுக்க முயன்று இருக்கிறது.

“அதிரையில் குடிநீரை குடிப்பதுபோல் நடித்த ஆளுமைகள்” என்கிற தலைப்பில் அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்த சூழலில் அதிரை எக்ஸ்பிரஸ் மீது பொய் புகார் ஒன்றை அதிரை காவல் நிலையத்தில் உள்ளூர் திமுகவினர் தொடுத்திருக்கிறார்கள். இதனை சட்டப்படி அதிரை எக்ஸ்பிரஸ் எதிர்கொள்ளும்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு முதலமைச்சர், உள்துறை செயலாளர், மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை இயக்குனர், காவல்துறை ஐஜி, டிஐஜி, மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அதிரை எக்ஸ்பிரஸ் அனுப்பியுள்ளது.

அதில் காவல்துறையை உள்ளூர் திமுகவினர் தவறாக பயன்படுத்துவது குறித்தும் கருத்துரிமை, ஊடக சுதந்திரத்தை கேலி கூத்தாக்கும் செயல்பாடுகள் குறித்தும் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img