அதிரையில் தமிழக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரை வரவேற்பதற்காக விழா மேடையில் மைக்கை பிடித்து நிர்வாகிகள் கோஷமிட்டனர். ஆனால் அங்கு கூடியிருந்த பெரும்பான்மையான பாஜகவினர் பதில் கோஷம் எழுப்பாமல் அமைதியாக நின்றிருந்தனர். பின்னர் எச்.ராஜாவின் பேச்சை மேடையிலிருந்த நிர்வாகிகளை தவிர வேறு யாரும் கை தட்டி ரசிக்கவில்லை. மேலும் பேசிக்கொண்டிருக்கும் போது பேருந்து நிலையத்தில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு அனைந்ததற்கு அரசியல் காரணம் பூசிய எச்.ராஜாவின் பேச்சைக்கேட்டு அங்கு கூடியிருந்த மக்கள் வாய்விட்டு சிரித்தனர். பல்ப் அனைந்ததற்கு அரசியல் சாயம்பூச முயன்று எச்.ராஜா பல்ப் வாங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





