Monday, September 29, 2025

ஆழ்ந்த உறக்கத்தில் 12வது வார்டு திமுக கவுன்சிலர் : விழித்தெழுவது எப்போது?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் உள்ள 12வது வார்டு நடுத்தெரு கீழ்புறம் 3 வது சந்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போடப்பட்ட தார்சாலை முற்றிலும் சேதமடைந்ததோடு, கருங்கற்கள் பெயர்ந்து வெளியே தெரிவதால் போக்குவரத்திற்கும், இவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுவது குறித்து வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் சாலை வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கின்றனர்.

இது குறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன் தடதட ரோடால் தடுமாறி விழும் வாகன ஓட்டிகள் : கண்டு கொள்வாரா 12வது வார்டு திமுக கவுன்சிலர்..? என்கிற தலைப்பில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட 12வது வார்டு கவுன்சிலர் விரைவில் இப்பகுதிக்கு தார்ச்சாலை அமைத்து தருவதாகவும் அதற்கான பணிகள் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது என்கிற எண்ணத்தில் இருந்த இப்பகுதி மக்களுக்கு மீண்டும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என வாக்குறுதி கொடுத்து விட்டு ஆமை வேகத்தில் கூட இதுவரை கவுன்சிலர் பணி செய்யாமல் இருப்பது வேதனையளிப்பதாக இப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

இப்பகுதியின் சாலைகளில் உள்ள கற்கள் பெயர்ந்து வெளியே தெரிவதால் சிறு குழந்தைகள், வயதானவர்கள், வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது 12வது வார்டு கவுன்சிலர் ராலியா சுகைபிற்கு தெரிந்தும் அவர் தெரியாமலிருப்பது கடும் கோபத்தையும் வருத்தத்தையும் தருவதாக இப்பகுதியில் வசிக்கும் 54 வயது மதிக்கத்தக்க ஒருவர் கூறியுள்ளார்.

இப்பகுதியின் நீண்ட நாள் தேவையாக இருக்கும் புதிய தார்ச்சாலை கோரிக்கையை ஆழந்த உறக்கத்தில் இருக்கும் 12வது வார்டு கவுன்சிலர் விழித்தெழுந்து விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img