Sunday, May 19, 2024

காவிரி விவகாரம்.. அதிரையில் முழு கடையடைப்பு போராட்டம்!!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திவடாத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நீரை பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடி பணியை தொடங்கவும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பல லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே விவசாயிகளோடு வியாபாரிகளும் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து விவசாய சங்கங்கள், திமுகவின் விவசாய அணி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன்படி கடைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதலே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.


spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...