Friday, May 17, 2024

அதிரையில் டெங்க்கு உரம் போடும் நகராட்சி ! ஆழ்ந்த உறக்கத்தில் நிர்வாகம் உறங்காத மக்கள் !

Share post:

Date:

- Advertisement -

நடவடிக்கை எடுக்குமா ? சுகாதார துறை

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் #டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் நாள்தோறும் பலர் உயிரிழந்து வருகிறார்கள் என ஊடகங்கள் கூறுகிறது. இதனால் மாநில சுகாதார துறை பம்பரமாக சுழன்று கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் விதி விலக்காக அதிராம்பட்டினம் நகரில் மட்டும் டெங்குக்கு உரம் போட்டு நோயை பரப்ப முயற்ச்சித்து வருவதாக தெரிகிறது. நகராட்சி அந்தஸ்து பெற்ற அதிரையில் ஆதிகாலத்து புகை இயந்திரம் இரண்டு மட்டுமே உள்ளது. காலை வேளைகளில் பெயருக்காக சில இடங்களில் அடிக்கப்படும் புகையால் வீதியில் உறங்கு கொசுக்கள் கூட் வீட்டின் கரைகளில் வந்து ஒளிந்து கொள்கிறது.

இரவு வேலைகளில் அசந்து தூங்க எத்தனிக்கும் ஒவ்வொருவரையும் தனது கூறான ஊசி மூலம் கொல்லாமல் கொன்று வருகிறது.

இதற்கு ப்யந்து ரசாயன ஊதுபத்திகளை நாடும் மக்கள் சுவாச கோளாரால் சிக்குண்டு வருகிறார்கள்.

“அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் முறையாக கொசு ஒழிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும், குறிப்பாக கொசு ஒழிப்பிற்கென இதுவரை மருந்துகள் இல்லை என்றும் புகை வழியாக கொசுக்குகளுக்கு ஆண்மை இழப்பு மட்டுமே செய்யப்படும் என கூறப்படுகிறது.”

கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்றால் அபேட் கெமிக்கல் கலந்த நீரை சாக்கடை மற்றும் தேங்கிய நீர்களில் தெளித்தால் மட்டும் புதிய லாவா கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க இயலும் என நகராட்சி ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார்.

கொசு ஒழிப்பில் அக்கரை காட்ட வேண்டும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன் அஸ்வா என்கிற தன்னார்வ சமூக அமைப்பு நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்திருந்த நிலையில் நிர்வாகம் மெத்தனபோக்காக நடந்து கொள்வதாக அதன் அமைப்பாளர் அப்பாஸ் கூறுகிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...