Saturday, September 13, 2025

அதிரை பள்ளியின் அலட்சியம்? – அரையாண்டு தேர்வுக்கு தயாராவது எப்படி,பெற்றோர்கள் குமுறல்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்டின் இயங்கி வரும் காதிர் முகைதீன், பள்ளி கல்லூரிகள் அரபி பாடசாலை என கல்விக்கென அன்றைய முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களாகும்.

அரசின் உதவிப்பெறும் பள்ளிகளாக காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி கூடங்கள் இயங்கி வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை இயங்கி வரும் இந்த பள்ளிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் 2023-24 ஆண்டிற்கான கல்வியாண்டு தற்போது நடந்து வருகிறது. காலாண்டு தேர்வு முடிந்து அரையாண்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இது வரை 6ஆம் வகுப்பு மற்றும் 7 வகுப்பிற்கான பாடப்புத்தகங்கள் இதுவரை வழங்க வில்லை அவ்வப்போது டெஸ்ட் தேர்வுகள் நடந்து அரையாண்டு தேர்விற்கு மாணவர்கள் தயாராவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுவதாவது, தாயில்லா பிள்ளையாக தவிக்கும் இன்றைய MKN ட்ரஸ்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் அரசிடம் இருந்து கிடைக்கும் உரிமைகளை கேட்டு பெற நிர்வாகம்.ஒன்றும் இல்லை எனவும், வக்பு வாரிய ஆனையர் நேரடி பார்வையின் கீழ் இயங்கும் இந்த கல்வி நிறுவங்களில் ஊதியத்திற்கு கூட போராடி பெற வேண்டிய சூழல் உள்ளன என்றார்.

மேலும் பள்ளியின் தற்போதைய அதிகாரி(வக்பு) பள்ளி பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பாடபுத்தகங்களை வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img