Tuesday, May 14, 2024

அதிரை கடற்கரைத்தெருவில் அரிமா சங்கம், KAIFA, முஹல்லா ஜமாஅத், DIYWA இணைந்து நடத்திய பனைவிதைகள் நடும் விழா!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(KAIFA), கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய பனைவிதைகள் நடும் விழா இன்று 07/12/2023 வியாழன் காலை 10.30 மணியளவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா M. அஹமது கபீர் தலைமை வகித்தார். கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க(KAIFA) செயலாளர் கோ. பிரபாகரன், கடற்கரைத் தெரு ஜமாஅத் தலைவர் V.M.A. அஹமது ஹாஜா, லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்(Governor Project) பேராசிரியர். செய்யது அஹமது கபீர், லயன்ஸ் சங்க சாசன தலைவரும் மாவட்ட ஆலோசகருமான பேராசிரியர். M.A. அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட விமானியும், சமூக செயற்பாட்டாளரும், தொழிலதிபருமான கேப்டன் E. அசோக்ராஜா, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளரும், கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்(KAIFA) தலைவர் கார்த்திகேயன் வேல்சாமி, மாவட்ட தலைவர்(PST Forum) TKP. ராஜேந்திரன் ஆகியோர் பனைவிதைகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசினர்.

பின்னர் நமது ஜமாஅத் மற்றும் இளைஞர் மன்றத்தின் சார்பில் வெட்டிக்குளத்தை சுற்றி சுத்தம் செய்து, நடைபயிற்சி செய்வதற்கு ஏற்பாடு செய்து தரும்படி KAIFA அமைப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை உடனே ஏற்றுக்கொண்ட KAIFA அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் வேல்சாமி, KAIFA அமைப்பின் சார்பில் வெட்டிக்குளத்தை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். இதற்கு ஜமாஅத் தலைவர் V.M.A. அஹமது ஹாஜா, KAIFA அமைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, அமைத்து தரப்படும் நடைபாதையை முஹல்லாவாசிகள் முறையாக பராமரிப்போம் என்ற உறுதியையும் அளித்தார்.

அதன்பின்னர் வெட்டிக்குளத்தைச் சுற்றி பனைவிதைகள் அனைவராலும் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நமது தெரு ஜமாஅத் நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க செயலாளர் M. ஹாஜா நசுருதீன், பொருளாளர் M. நியாஸ் அஹமது, கடற்கரைத்தெரு ஜமாஅத் செயலாளர் P.G.T. முஹம்மது இஸ்மாயில், பொருளாளர் M. நஸ்ருதீன் சாலிஹ், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் P.G.T. செய்யது முஹம்மது, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள், தெருவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...