அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள 24 கடைகளை ஏலம் விட்டதாக பொய் கூறி தமக்கு சாதகமாக உள்ள சிலருக்கு ஒதுகீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது கழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி களங்கமற்ற ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கி உள்ளதாக உண்மை உடன்பிறப்புக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
மேலும், வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து 2வது வார்டு உறுப்பினரான சித்தி ஆயிஷா அஸ்லம் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை எழுதியுள்ளார் அதில், 24 கடைகளுக்கான பொது ஏலத்தை ரகசியமாக செய்து கொண்டுள்ளனர், அவர்களுக்கு தேவையான ஆட்களுக்கு சட்டத்தை மீறி ஒதுக்கீடு செய்துள்ளனர் என்பன உள்ளிட்ட புகார்களை தெரிவித்து சட்டவிரோத ஏலத்தை ரத்து செய்து உத்தரவிட கோரியும், மீண்டும் முறையாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திய பின்பு குலுக்கலோ,அல்லது பகிரங்க ஏலமோ நடத்திட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.