Monday, December 1, 2025

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வை கைது செய்ய சொல்லும் அதிரை திமுக! தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்!! தமுமுக தொண்டர்கள் எச்சரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டவிரோதமாக சீல் வைக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லீம் கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளிக்கு ஆதரவாக பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், சிறுபான்மை கல்வி நிலையத்திற்கு திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் ஏற்படுத்தும் இடையூறுகள் குறித்தும் பேசினார். மேலும் இவரின் சிறுபான்மை மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் எனவும் கூறினார்.

இந்தநிலையில், அதிரை காவல்நிலையத்திற்கு சென்ற சில திமுகவினர், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வை கைது செய்ய சொல்லி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர தமுமுக-மமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிரை காவல் நிலையம் சென்று விவரம் கேட்டுள்ளனர். அப்போது நம்மிடம் பேசிய தொண்டர்கள், சமூதாய தலைவரான ஜவாஹிருல்லா-வை கைது செய்தால் தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க செய்வோம் என ஆவேசத்துடன் கூறினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img