Sunday, February 1, 2026

அதிரை கடற்கரைத்தெரு வாழைக்குளம் தூர்வாரும் பணி தொடக்கம்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள வாழைக்குளம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. கோரை புற்களால் படர்ந்து காணப்படும் வாழைக்குளத்தை தூர்வார கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(KAIFA) அமைப்பின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை வாழைக்குளத்தை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. குளத்தை அகலப்படுத்தி சுற்றிலும் கரைகளும் அமைக்கப்பட உள்ளது. அதிரை கடற்கரைத்தெரு வாழைக்குளம், கைஃபா அமைப்பு தூர்வாரும் 190வது குளம் ஆகும்.

இந்நிகழ்வில் கைஃபா அமைப்பின் தலைவரும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளருமான கார்த்திகேயன் வேல்சாமி, கைஃபா அமைப்பின் செயலாளர் பிரபாகரன், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா அகமது கபீர், செயலாளர் ஹாஜா நஸ்ருதீன், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் செய்யது முஹம்மது, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், தெருவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img