Saturday, September 13, 2025

தஞ்சையில் CBD மற்றும் SNM அமைப்புகள் நடத்திய குருதிக் கொடையாளர்கள் சேர்க்கை முகாம்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் எங்கும் பல்வேறு பகுதிகளில் அவசரமாக வரக்கூடிய பல்வேறு இரத்த தேவைகள் தொடர்ச்சியாக பூர்த்திசெய்வதில் தன்னார்வல தொண்டு அமைப்புகளின் பங்கு அளப்பறியதே.

அதே போல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வரக்கூடிய அவசர இரத்த தேவைகளை பூர்த்தி செய்வதில்  கிரசண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) மற்றும் சமூக நீதி நற்பணி மன்றம்(SNM) அமைப்புகள் தொடர்ந்து சிறந்த முறையில் சேவையாற்றி வருவது பொதுமக்கள் அறிந்த ஒன்றே.

தற்போதைய சூழ்நிலையில் தஞ்சாவூர் பகுதியில் அதிக அளவில் இரத்த தேவைகள் வந்தவண்ணம் இருப்பதை கருத்தில்கொண்டு CBD அமைப்பு தொடர் விழிப்புணர்வு மற்றும் இரத்த கொடையாளர் சேர்க்கை முகாம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக தஞ்சாவூர் ஆற்றங்கரை பள்ளிவாசல் வளாகத்தில் இன்று(09/02/2024) காலை 11 மணி முதல் CBD மற்றும் SNM அமைப்புகள் இணைந்து இரத்த கொடையாளர் சேர்க்கை முகாமை நடத்தினர்.

இம்முகாமில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 160க்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர்களின் விபரங்கள் அவர்களின் முழு விருப்பத்துடன் பெறப்பட்டது.

இந்த முகாமிற்கு CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோ.Ln.அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு தலைமை தாங்கி துவக்கிவைத்தார்.

இம்முகாமில் CBD அமைப்பின் நிர்வாகிகள் பாய்ஸ் அகமது, ஜெய் சூர்யா, சலாஹுத்தீன், லெனின் மனோஜ் மற்றும் SNM அமைப்பிலிருந்து இஸ்மாயில், ஸுஹைல், ராசித், ஈலால் ஆகியோர் கலந்துகொண்டு களப்பணியாற்றினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : நீயா..நானா.. நிரூபித்தது...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img