Saturday, September 13, 2025

தேர்தல் களம் 24 : சுயேட்சையாக களமிறங்குகிறார் தடா ரஹீம் ? – பரபர அரசியலில் ராமநாதபுரம் !

spot_imgspot_imgspot_imgspot_img

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் நிறுவன தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எங்களுக்கு பல்வேறு கட்சிகளில் இருந்தும், அழைப்புகள் வந்த வன்னம் உள்ளது என்றும், இக்கால கட்டத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாக கூறுகிறார்.

மேலும்,சில இஸ்லாமிய அரசியல் கட்சிகள் சமுதாய மக்களை அடகுவைத்து ஒன்றிரண்டு சீட்டுக்களை பெற்று தங்களை வளப்படுத்தி கொள்கிறார்கள் என்றும், அவ்வாறான செயலை இந்திய தேசிய லீக் கட்சி ஒரு போதும் செய்யாது என தடா ரஹீம் தெரிவித்தார்.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு இந்திய தேசிய லீக்கின் பங்கு எவ்வாறு இருந்துள்ளது என அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் நன்றாக தெரியும் எனவும், அவர்களின் விடுதலையில் சில இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் லேபில்களை ஒட்டி கொள்கிறார்கள் என்றார்.

ராமநாதபுரத்தில் குறிப்பாக போட்டியிட முனைவது ஏன் என்ற கேள்விக்கு அதற்கான காரணங்களை கண்டிப்பாக ஊடகங்களில் வெளிப்படுத்துவோம் என்றும் அப்போது நமது வெற்றியும் உறுதிபடுத்தப்படும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img