Sunday, April 28, 2024

அதிராம்பட்டினம் மின் வாரியத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்- திடீர் பரபரப்பில் மின் வாரியம்..!!

Share post:

Date:

- Advertisement -


அதிரை 110கி.வா துணை மின் நிலையத்திற்கு கோபுரங்கள் அமைக்க தனியார் விளை நிலங்களை அரசு பயன்படுத்தியுள்ளது.

இதற்க்காக இழப்பீட்டு தொகை பெற்று தருவதாக கூறி மின்வாரிய அதிகாரிகள் மேற்கூறிய இடங்களை கையகப்படுத்தி உயரழுத்த மின் கடத்திகளை பொருத்தியுள்ளனர்.

100 சதவீத பணிகள் முடிவடைந்தும், இழப்பீட்டு  தொகையினை குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வழங்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாமிலும் அவ்வப்போது மனு அளித்தும் பலனில்லை என்கின்றனர்.

இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அதிராம்பட்டினம் 110KV துணை மின் நிலையத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் அதிராம்பட்டினம் மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உரிய இழப்பீட்டு தொகையினை அறிவித்தப்படி கொடுக்க வேண்டும் என்றும் தவறினால் முதல்வரின் கவனத்தில் ஈர்க்கும்படியான போராட்டத்தை முன்னொடுப்போம் என்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...