Saturday, September 13, 2025

அதிரை கடற்கரை மறுசீரமைப்பு பணி செய்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள்..? பொய் குற்றச்சாட்டுக்கு துணை போகும் அதிரை நலன்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரை மறுசீரமைப்பு பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியை சமீபத்தில் கைஃபா அமைப்பின் முன்னெடுப்பில் அதிரை கடற்கரை தெரு தீனுள் இஸ்லாம் இளைஞர் அமைப்பு, அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம், அதிரை லயன்ஸ் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பில் சமூக சேவர்களின் ஒத்துழைப்பில் சிறப்பாக செயலாற்றி வந்தனர். இந்த பணியின் துவக்க விழாவில் (பிப்.29) அதிரை நகராட்சி மன்ற தலைவர் தாஹிரா அப்துல் கரீம் மற்றும் நகராட்சி துணை தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதிரை கடற்கரை தெரு பகுதியில் மரம் நடுதல், கடற்கரை தெரு பகுதியில் தூர்வாரப்பட்ட குளத்தை பார்வையிடுதல் மற்றும் அதிரை கடற்கரையை பார்வையிட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வருகை புரிந்தார்.

இந்த தகவலை முன்னரே அறிந்து கொண்ட அதிரை நலன்(தன்னை தானே அப்படி அழைத்துக் கொள்வார்) மக்கள் மத்தியில் ஏதாவது ஒரு குழப்பத்தையும் தனக்கு விளம்பரத்தை தேடவேண்டும் என்கிற நோக்கில் ஏறிப்புறக்கரை பகுதியில் உள்ள பாஜகவினர் மற்றும் அதிமுக பிரமுகர்களுடன் கைகோர்த்துள்ளார்.

மேலும் நமது ஊர் கடற்கரையை மிக பெரிய சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கை சீர்குலைக்கும் வண்ணம் அமைச்சர் கடற்கரையை பார்வையிடுவதை எப்படியாவது மறைமுகமாக தடுக்க நினைத்து அதிரை சமூக நலன் எரிபுறக்கரை பகுதியில் பாஜக பிரமுகர் சுப்பிரமணி மற்றும் சிலரிடம் வீடியோ எடுத்து சம்பவத்தை ஒன்றுமே தெரியாதது போல் சில கேள்விகளை முன்வைத்து அதனை காணொளியாக பதிவு செய்து யூடூப்(YOUTUBE) தளத்தில் ஒன்றுமே தெரியாதது போல் வெளியிட்டது மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

மேலும் அந்த வீடியோவில் பேசிய அதிமுகவை சேர்ந்த ஒருவர் “இந்த கடற்கரை மறுசீரமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் சென்னையில் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பத்தாயிரம் நபர்களை அதிரையில் இறங்கி எதையோ மறித்துவிடுவேன் என்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் விதமாக பேசியுள்ளார். அந்த காணொளியில் பேசிய ஒருவருக்கு சமூக நலன் ஆக்கிரமிப்பு என்ற வார்த்தையை எடுத்து கொடுத்தவுடன் அவரும் அதிரையில் கடற்கரையை மறுசீரமைப்பு செய்பவர்கள் கடற்கரையை ஆக்கிறமிக்கின்றார்கள் என்ற நோக்கில் இது ஆக்கிரமிப்பு என்றும் பேசியுள்ளார்.

சமூக நலன் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பணிகளை செய்யும் அமைப்புகள், சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீது பொய் குற்றச்சாட்டை முன்வைக்கும் காணொளியாக  இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த காணொளியை கண்ட பொதுமக்கள் பலர் கூறுவதாவது, அதிரை நகராட்சிக்கு என்றுமே ஆதரவாக உள்ள அதிரை நலன் இந்த காணொளி மூலம் நகர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் பங்குபெற்று துவங்கிவைத்த பணியை ஆக்கிரமிப்பு பணி என்ற நோக்கில் காணொளியை வெளியிட்டுள்ளார் என்றும், தற்பொழுது அதிரை நலன் என்கிற போக்கில் இரண்டு ஊர் மக்களுக்கு கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் பாஜக நபர்களோட சேர்ந்துகொண்டு விடியோவை ஒன்றுமே தெரியாதது போன்று வெளியிட்டுள்ளார். மேலும் இவரின் பதிவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்ல திராணியில்லாமல் ப்ளாக் செய்து செல்கிறார் என்றும், இவரை போன்ற உள்ளூர் சங்கீகளை அதிரை பொதுமக்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, மக்களுக்கு நன்மையான தகவல்களை பதிவு செய்கிறேன் என்ற பெயரில் பல பொய்யான விஷயங்களை தானே செய்தது போன்று பிம்பத்தை காட்டுகிறார் என்றும் கூறியுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img