Sunday, February 1, 2026

அதிரையில் மமக வார்டு உறுப்பினரை, ஒருமையில் பேசிய அன்சர்கான் – வாக்கு சேகரிப்பிற்கு NO… மமக காட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு, கிழக்கு மேற்கு என செயல்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்ட பின்பு கிழக்கு மேற்கு பிரச்சினை பூதாகரமாகி வருகிறது.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் ச.முரசொலி அதிரை நகரில் வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.

அப்போது முன்னாள அதிரை நகர செயலாளர் இராம குணசேகரனின் தீவிர ஆதரவாளரான அன்சர்கான் தமது பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, மமகவின் 24வது வார்டு உறுப்பினர் மாலீக் என்பவரை ஒருமையில் பேசி கீழே இயங்குமாறு கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல மஜக உள்ளிட்ட கட்சிகளிடமும் கடுமை காட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் மமகவின் அதிரை நகர அவசர கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் கூட்டணி கட்சிகளை மதிக்காத உள்ளூர் நிர்வாகத்திற்கு இனி எந்த ஒத்துழைப்பை வழங்குவதில்லை எனவும், மமக தலைமை வரை புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட உள்ளதாக மமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...
spot_imgspot_imgspot_imgspot_img