அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி திறப்பு விழா கண்டு 15 ஆண்டுகள் நிறைவு, 14 ஆண்டுகளாக முஹல்லா நிர்வாகத்தில் திறம்பட செயலாற்றி வழிநடத்தி வந்த ஜமாஅத் தலைவர் V.M.A. அஹமது ஹாஜாவை கவுரவிக்கும் விதமாகவும், கடந்த கல்வியாண்டில் முஹல்லாவில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ/மாணவிகளை ஊக்குவிக்கும் விழா என முப்பெரும் விழா நேற்று 02/072025 புதன்கிழமை மாலை கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் புதிதாக கட்டப்பட்ட கடற்கரைத்தெரு ஜூமுஆ மஸ்ஜித் திறப்பு விழா கண்டு 15 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், பள்ளியின் திறப்பு விழா குறித்த கல்வெட்டு வைக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக சுதந்திர போராட்ட தியாகி மர்ஹூம். M.A.C. புஹாரி அவர்களின் நினைவாக கல்வெட்டு வைக்கப்பட்டது.
பின்னர் கடந்த 14 ஆண்டுகளாக கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி நீண்ட காலமாக தலைவராக முஹல்லாவை சிறப்பாக வழிநடத்தி வந்த ஜனாப். V.M.A. அஹமது ஹாஜா அவர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் முஹல்லாவில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த முப்பெரும் விழாவில் கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், முஹல்லாவாசிகள் என பலர் கலந்துகொண்டனர்.
படங்கள் :
























