Monday, September 15, 2025

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையையும், பாராட்டுச் சான்றிதழையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தகைசால் தமிழர் விருது கடந்த 4 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த விருதைப் பெறுகிறார் காதர் மொகிதீன்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தகைசால் தமிழர் விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (4.7.2025) நடைபெற்றது.

இதில் மூத்த அரசியல் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அன்புக்குரியவருமான பெரியவர், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும் இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். தமிழ்நாட்டில் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். மனித நேய மாண்பாளர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அறிவார்ந்த சொற்பொழிவாளர், மனிதநேயத்திற்கும் மதநல்லிணக்கத்திற்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

கோவையில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர். எட்டாண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் ‘தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர். வாழும் நெறி, குர்ஆனின் குரல், இசுலாமிய இறைக்கோட்பாடு உட்பட ஆறு நூல்களை எழுதியவர்.

மேலும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர், கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர், பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு உயர்த்திய ஆசானும் ஆவார்.

‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...

நெருங்கும் ரமலான் – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை!

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img