Sunday, January 11, 2026

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப் பக்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

ஆக்கம் – அதிரை அப்துல் காதர், அதிரை அமீன்.

அதிரையின் பெருமை ‘கௌரவ மாஜிஸ்திரேட்’ (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள்

இன்று ‘சமூக புற்றுநோய் கிருமிகள்’ எல்லாம் ‘சமூக ஆர்வலர்’களாகவும், தனது கைத்தடி என்பதற்காகவே இப்படிப்பட்ட நச்சுக் கிருமிகளுக்கு குடை பிடித்து தனது பொறுப்புக்கும் பதவிக்கும் இழுக்கை தேடிக்கொள்பவர்களும் இருந்து கொண்டுள்ள இதே அதிரையில் தான் பல நன்மக்களும் மறைந்தும் வாழ்ந்து கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட அதிரையின் மாணிக்கங்களுள் ஒருவராக, ‘கௌரவ மாஜிஸ்திரேட்’ பதவி வகித்த மர்ஹூம் N.K.S. அப்துல் ரஜாக் அவர்களைப் பற்றி மிகச்சில விஷயங்களையாவது இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்திருத்தல் நல்லது.

N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் ஒரு மிராசுதாராக, தேங்காய் மொத்த வியாபாரியாக (S.A. THAJUDEEN & CO.) ஒரு அரசியல்வாதியாக, சுதந்திர இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத்தின் முதல் தலைவராக, கவுன்சிலராக, அரசாங்க ‘கௌரவ மாஜிஸ்திரேட்’டாக, அதற்கும் மேலே மனிதநேய நிறைகுடமாய் திகழ்ந்துள்ளார்கள்.

தான் கௌரவ மாஜிஸ்திரேட்டாக இருந்தபொழுது நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு சிறுபான்மையினர் பிரச்சனைகளில் கருத்து மற்றும் நல் ஆலோசணைகளை வழங்கி உதவுவதுடன், அரசுப்பணிகளில் சேர்வதற்கு ஏதுவாக பலரும் நன்மையடையும் வகையில் நற்சான்று / சிபாரிசு கடிதங்களை நாடிவந்தோருக்கு வழங்கியுள்ளார்கள். அவர்களுடைய சிபாரிசின் அடிப்படையில் 1954 ஆம் ஆண்டு அரசாங்க வேலையில் சேர்ந்த ஒருவர் தான் மர்ஹூம் K.S.M. இஸ்மாயில் அவர்கள்.

பட்டுக்கோட்டையில் தற்பொழுது புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம் முன்பு குளமாக இருந்ததும், MGR அவர்களுடைய ஆட்சி காலத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும், வருவாய்துறை அமைச்சராகவும் இருந்த திரு எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் முயற்சியால் குளம் தூர்க்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது ஆனால் இந்த குளத்தை வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தது N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் தான்.

மர்ஹும் NKS அப்துல் ரஜாக்

ஒருமுறை ஆந்திர மாநிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்கவந்த ‘ஒட்டர்’ இன மக்கள் கூட்டமாக பட்டுக்கோட்டையில் தங்கியிருக்க, அவர்களை பற்றி விசாரித்த N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் தனது சொந்த செலவில் குளத்தை வெட்டுமாறு பணிக்க, உருவானது தான் ‘தலையாரி குளம்’. பல வருடங்கள் மக்கள் குளிக்கப் பயன்பட்ட இந்தக்குளம் காலப்போக்கில் இன்று அதிரையின் மேலத்தெருவில் உள்ள “புதுக்குளம்” நிலையை தலையாரி குளமும் அடைந்து நாறியது. பொதுமக்களின் பொறுப்பற்றத்தனத்தால் விளைந்த விளைவே.

N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் தான் அதிரை நகர காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபொழுதே நேர்மையாளர்கள் கோஷ்டி அரசியலில் நீடிக்க முடியாது என்பதை உணர்ந்து பதவியையும், கட்சியையும் உதறித் தள்ளினார்கள். ஒன்றை இரண்டாக்கும் கத்திரிக்கோல் போல் இல்லாமல்

இரண்டை ஒன்றாக்கும் ஊசி நூல் போல் இருக்க வேண்டும்.. என்பதற்கு உதாரணமா இருந்தவர்.

குடும்பம் குறித்த சிறுகுறிப்பு (நாங்கள் அறிந்த வரையில்):

1980 ஆம் ஆண்டு வஃபாத்தான அப்துல் ரஜாக் அவர்களுக்கு தாஜூதீன், சர்புதீன், இக்பால் என 3 ஆண் வாரிசுகளும், 2 பெண் வாரிசுகளும் உள்ளனர்.

ஆண் வாரிசுகள் வழிப்பேரர்கள் N. K. S. சபீர் (அதிராம்பட்டிணம் நகர திமுக அவைத்தலைவர் ) அப்துல் ரஜாக், ரியாஸ் அகமது, அகமது அஜீம், நஸீர் அகமது ஆகியோர்களுடன்,

பெண் வாரிசுகள் வழிப்பேரர்கள் தான் டாக்டர் அப்துல் ஹக்கீம், பசுலுதீன், சேக்காதி, அஹமது கபீர், தவ்பீக், ஹாஜா சரிப் ஆகியோர்கள் என்பதும் கூடுதல் தகவல்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது...

அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!

அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல்...
spot_imgspot_imgspot_imgspot_img