Sunday, May 5, 2024

admin

8960 POSTS

Exclusive articles:

ஹிஜாப் சர்ச்சை : இந்தியா உணவகத்திற்கு சீல் வைத்த பஹ்ரைன் அரசு!

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்து பெண்ணிற்கு இந்திய உணவகம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, உணவகத்தை மூட அந்நாடு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பாக பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம் (பிடிஇஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள லான்டர்ன்ஸ் உணவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நாட்டின் சட்டங்களை மீறும் கொள்கைகளைச் செயல்படுத்துவதை உணவகங்கள் தவிர்க்க வேண்டும் என பிடிஇஏ கேட்டுக் கொண்டுள்ளது. “மக்களை குறிப்பாக அவர்களின் தேசிய அடையாளத்தை வைத்து பாகுபாடு காட்டும் அனைத்து செயல்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என ஆணையம் தெரிவித்துள்ளது.சுற்றுலா தொடர்பான நிறுவனங்கள் தொடர்பான 1986 ஆம் ஆண்டின் ஆணைச் சட்ட எண் 15 இன் படி உணவகத்தை மூடிவிட்டதாக ஆணையம் மேலும் கூறியது.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ள லான்டர்ன்ஸ் உணவகம், பெண்ணிற்கு அனுமதி மறுத்த மேலாளர் பணியிடை நீக்கம் செய்திருப்பதாக கூறியுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக அழகான பஹ்ரைன் நாட்டில், நாங்கள் அனைத்து நாட்டினருக்கும் சேவை வழங்கி வருகிறோம் என்பதை அறிய  லான்டர்ன்ஸ் அனைவரையும் வரவேற்கிறோம்.” என இன்ஸ்டாகிராமில் அந்த உணவகம் பதிவிட்டுள்ளது.மேலும், ஒரு நல்லெண்ண செயலாக மார்ச் 29 தேதி பஹ்ரைன் குடிமக்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என லான்டர்ன்ஸ் உணவகம் தெரிவித்துள்ளது.

ரமலான் தள்ளுபடி – 12 வகையான பேரித்தபழம் ஒரே இடத்தில் ஸஹர் டேட்ஸ்!

சவூதிஅரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தரமான 12 வகையான பேரித்தபழங்கள் நமது அதிராம்பட்டினத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றது. நம்மிடத்தில் மொத்தமாகவும் சில்லறையாகவும் ( WHOLESALE AND RETAIL ) கிடைக்கும். ரமலான் முன்னிட்டு 5...

ஹிஜாப் அடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர் சர்ச்சை! முஸ்லீம்கள் கடை போட தடை!

சமீபகாலமாக கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஹிஜாப் பிரச்சனைகள் சூழ்ந்துவந்த நிலையில் மற்றோரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தெற்கு கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் கோடி மாரிகாம்பா ஜாத்ரா திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விமரிசையாக கொண்டாடப்பட்டு...

லக் அடித்தால் மட்டுமே புகார் அளிக்கமுடியும்! ஏர்டெல் வாடிக்கையாளர்கள் குமுறல்!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக ஏர்டெல் நெட்வொர்கிள் சிக்கினல் பிரச்சனை , கால் செய்தால் சென்றடையவில்லை இது போன்று அதிகமான பிரச்சனைகளை...

அதிகாரம், மிரட்டல், காசுக்கு விலைபோகாத அதிரை எக்ஸ்பிரஸ்! மக்களின் குரலாய் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும்!!

2007ம் ஆண்டு அதிரை அல்-அமீன் (பஸ் ஸ்டாண்ட்) பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட நெருக்கடியை மக்கள் மன்றத்தில் சென்று சேர்க்க செய்ய துவங்கப்பட்டது தான் அதிரை எக்ஸ்பிரஸ். ஆரம்பமே அதிகார அடக்குமுறைக்கு எதிராக சாமானியர்களின் குரலாய்...

Breaking

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...
spot_imgspot_img