Home » உடல் உழைப்பே ஆரோக்கியத்தின் மாமருந்து!!!

உடல் உழைப்பே ஆரோக்கியத்தின் மாமருந்து!!!

by admin
0 comment

மனித சமுதாயம் பெருகும் போது அவர்களுக்கான தேவைகள் கூடுவது சகஜமே அந்த தேவைகளை நிறைவேற்ற அறிவியல் முன்னேற்றம் அடையும் போது மனிதனின் தேவைகள் நிறைவேறுவதோடு மனிதன் சுமக்கும் சுமைகளை கருவிகள் குறைப்பது இயல்பானதே

அந்த கருவிகள் பாதிப்படையும் போது அந்த கருவிகளுக்கு செய்யும் செலவுகளை விட மனிதன் தனது உ டல்நோய்களுக்கும் அதிகமாகவே தற்காலத்தில் செலவு செய்கின்றான்

இதற்க்கு உலக அமைப்பு காரணமாக இருந்தாலும் கருவிகளை நம்பி மனிதனிடம் பெருகிவிட்ட தேவையற்ற சோம்பேறித்தனமும் காரணமாகி விட்டது

கால்கடுக்க நடந்து சென்ற போது மனிதனிடம் இருந்த உடல் வலிமை தற்போது வாகனத்தில் பயணம் செய்யும் நிலையை அடைந்த பின் முற்றிலும் குறைந்து விட்டது

சொகுசு பேரூந்துகளில் படுத்து கொண்டு பயணம் செய்வதை கூட இன்று மனிதன் சிரமம் என்கிறான்

தற்காலத்தில் கொழுப்பு நோயால் இதய நோயால் உடல் பருமன் நோய்களால் அதிகமதிகம் அவதிப்படுவது குடும்ப பெண்கள் என்பது சாதாரணமாகி போனது

காரணம் ஒரு காலத்தில் குடும்ப பெண்கள் தங்களது கரங்களால் அன்றாடம் செய்து வந்த வீட்டு வேலைகளும் இன்று கருவிகள் செய்யும் நிலையாகிப்போனது

துணி துவைக்கும் வாசிங் மிஷினில் உலர்ந்த துணிகளை வெளியில் எடுத்து காயப்போடவும் கூட சில குடும்பங்களில் ஒரு நாள் ஆகிறது

இதற்க்கு மூல காரணம் சோம்பேறித்தனமும் தொலைகாட்சி சீரியல்களும் முன்னனியாகி விட்டது

கடந்த காலங்களில் பத்து குழந்தைகளை ஈன்ற பெண்கள் கூட அவர்களின் முதிய வயதில் இளமை இறுக்கத்தோடு இருந்தனர்

தற்காலத்தில் இரு குழந்தையை ஒரு பெண் பெற்றெடுப்பதையே சாதனையாக கருதுகின்றனர்

அவ்வாறு பெற்றெடுத்தாலும் நாற்பது வயதை அடையும் முன்பே அறுபது வயதை எட்டிய பாவனைகளை உடல் அளவில் பெற்று விடுகின்றனர்

இந்த நிலை மாற வேண்டுமானால் தேவையை பூர்த்தி செய்யும் கருவிகள் நம்மிடம் இருந்தாலும் அதை கைகளால் செய்யும் சந்தர்பம் இருந்தால் அவைகளை கைகளால் தான் நிறைவேற்ற வேண்டும்

நடந்து செல்லும் அளவு தூரமாக இருப்பின் அவ்விடத்திற்க்கு வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்

ஏசி காற்றில் உறங்கும் வசதி இருந்தாலும் இயற்கை காற்றில் உறங்கும் பழக்கத்தை இயல்பிலேயே கொண்டு வர வேண்டும்

உடற்பயிற்சிக்கு என்று நேரத்தை ஒதுக்காவிட்டாலும் உண்ணுவதற்க்கு ஏற்ற வீட்டு வேலைகளை சுய வேலைகளை அன்றாடம் தனது கைகளாலே செய்து பழக வேண்டும்

அணியும் ஆடை முதல் உண்ணும் இட்லி மாவு வரை ரெடிமேடாக கிடைப்பது அறிவியல் வளர்ச்சி
அதே நேரம் அது தான் உடல் தளர்ச்சியின் வளர்ச்சியும் கூட

இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கே தேவையான அறவுரை —- J. யாஸீன் இம்தாதி

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter