Tuesday, February 3, 2026

பட்டுகோட்டை அரசு மருத்துவமனையை கண்டித்து போராட்டம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் விபத்திற்குள்ளானோர்களை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலர் இறந்துவிடும் நிலை நிலவி வருகிறது.

இந்நிலையை போக்கும் வகையில் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை காலை போராட்டம் நடத்தபோவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று காலை பட்டுகோட்டை அரசு மருத்துவமனையின் அருகாமையில் இளைஞர் கூட்டம் கூட ஆரம்பித்தனர்.
அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்பினால் இளைஞர்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டன. இதனையடுத்து, பட்டுகோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகாமையில் இளைஞர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதன் பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img