48
பல்லடம் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவர் ஒருவர் பலியாகி உள்ளார்.
கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். மகன் சேவுகமூர்த்தி இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
காய்ச்சல் காரணமாக பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேவுகமூரத்தி டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பலியானார்.