178
மதுரை: நடிகர் கமல்ஹாசன் இன்று நேரடி அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பெயரை அறிவித்தார்.
கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்‘. கட்சியின் கொடியில் இணைந்த கைகள் மற்றும் நடுவிலே ஒரு நட்சத்திரம் அமைந்துள்ளது. வெள்ளைக் கொடியில் சிகப்பு மற்றும் வெள்ளையில் கைகள் அமைந்துள்ளது. இது மக்களுக்கான கட்சி, நீங்கள்தான் தலைவர்கள் என மக்களிடம் கூறினார் கமல்.