Home » தடையை திரும்பப் பெறு! தொல்லைகளை நிறுத்திடுக! – ஜார்கண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் கோரிக்கை!

தடையை திரும்பப் பெறு! தொல்லைகளை நிறுத்திடுக! – ஜார்கண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் கோரிக்கை!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:-  ஜார்கண்ட் மாநில அரசாங்கம் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்திருப்பதை தொடர்ந்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா மாநில ஆளுநர் மற்றும் முதல் அமைச்சருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார். இயக்கம் மீதான தடையை நீக்குமாறும் தடையின் பெயரால் இயக்கத்தின் உறுப்பினர்களை குறிவைத்து தொல்லைகள் கொடுப்பதை நிறுத்துமாறும் அதில் கோரிக்கை வைத்துள்ளார்.

கடிதத்தில் இருந்து,

”இந்தியாவின் 17 மாநிலங்களில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். மதம், சாதி மற்றும் பிற பிரிவுகளை கடந்து இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவை பெற்று, அடித்தட்டு செயல்வீரர்களின் அடித்தளத்தை பெற்ற இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட். இந்தியாவின் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் விழுமியங்கள் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டு பின்பற்றி வருகிறோம். ஆதிவாசிகள், தலித்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் பிற நலிந்த பிரிவினரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அமைதியான, ஜனநாயக வழியிலான, சட்டப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். சமூகங்களை வலிமைப்படுத்துதல் என்பது எங்களை பொறுத்தவரை வெற்றுக் கோஷமல்ல.

இந்தியாவில் மட்டுமே எங்களின் செயல்பாடுகள் உள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள எந்தவொரு இயக்கத்தின் சித்தாந்தத்தையும் நாங்கள் பின்பற்றுவதில்லை, வெளிநாடுகளில் உள்ள எந்த இயக்கத்தோடும் எங்களுக்கு தொடர்புகளும் கிடையாது. ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற விசித்திரமான குழுக்களின் சித்தாந்தங்கள் நமது நாட்டின் பண்பாடுகளுக்கு எதிரானது என்பதை நாங்கள் உறுதியாக நம்புவதால் இவர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு எங்கள் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தியும் பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தும் வருகிறோம். ஊடகங்களின் சிறு பிரிவினர் ஊகித்து, எங்கள் உறுப்பினர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைவதாக கதை கட்டியுள்ளனர். ஆனால் இத்தகைய அறிக்கைகளின் உண்மைத்தன்மையை எந்தவொரு விசாரணை ஏஜென்சியும் நிரூபிக்கவில்லை”.
தடை குறித்த பத்திரிகை செய்தி வெளியான மறுதினம், ஜார்க்கண்டில் இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை காவல்துறையினர் குறிவைத்து, தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளதை மாநிலத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு அவை சீல் வைக்கப்படுவதாகவும் இயக்க செயல்வீரர்கள் விசாரிக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயகத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் எதிராக காவல்துறையின் செயல்பாடுகள் இருப்பதால் அதனை நியாயப்படுத்த முடியாது என்று எம்.முஹம்மது அலி ஜின்னா குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நீதியுடன் நடந்து கொள்ளுமாறு அவர் முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளார்.

”தவறான தகவல்கள் மற்றும் ஊகங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்த்து உடனடியாக தடையை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறோம். தற்போது உங்கள் மாநிலத்தில் இயக்க செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருப்பதால் சட்டரீதியான தீர்வுகளை தேடுவதே எங்கள் முன்னுள்ள வாய்ப்பாக உள்ளது. தடையின் பெயரால் உங்கள் அரசாங்கம் எங்களின் உறுப்பினர்களை குறிவைத்து, தொந்தரவு செய்யாது என எதிர்பார்க்கிறோம்”. தவறான கருத்துகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு இருவரையும் சந்திப்பதற்கான நேரத்தையும் எம்.முஹம்மது அலி ஜின்னா கேட்டுள்ளார்.

ஜார்கண்டில் இயக்கம் தடை செய்யப்பட்டதை எதிர்த்து, ஜார்கண்ட் தவிர்த்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இன்றும் நாளையும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்துகின்றனர்.

இப்படிக்கு

டாக்டர் முஹம்மது ஷமூன்,
இயக்குநர், மக்கள் தொடர்பு துறை,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter