தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இஸ்லாமியர்கள் பலர் வாழும் ஓர் முக்கிய பகுதியாக உள்ளது.இங்கு முஸ்லிம்களின் வனகஸ்தலமான பள்ளிவாசல் சுமார் 30க்கும் மேற்பட்டே உள்ளது.
இப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் கட்டுமான பணி மற்றும் பள்ளி நிர்வாகிக்க பள்ளிவாசலுக்கு சந்தா போன்றவை பெறப்பட்டும் அல்லது பள்ளிவாசல் இடத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டு அதன் வாடகை பணம் மூலம் நிர்வகிக்கின்றனர்.
இந்நிலையில்,பள்ளிவாசலை செழிப்பாக்க தன் சொத்தையும் விற்க தயங்காத இந்த அதிரை மக்களிடையே மதரஷத்துல் மஸ்னி வல்மஸ்ஜித் பள்ளிவாசளுக்கு நிர்வாக சபையினர் இறைவனின் கிருபையால் பலரின் உதவிகளை நாடியுள்ளனர்.
ஏறிப்புறக்கரை,அதிராம்பட்டினத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பழைய கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் மதரஷத்துல் மஸ்னி வல்மஸ்ஜித் பள்ளிவாசல் இயங்கி வருகிறது.
இதற்காக பள்ளியின் பராமரிப்பு வேலைகள் மற்றும் இமாம் ,முஅத்தீன் ஆகியோருக்கு சம்பளம் வழங்க பொருளாதாரம் இல்லாத நிலை ஏற்பட்டது.
கடந்த 5மாதங்களுக்கு மேலாக பொருளாதார குறைபாடால் அங்கு பள்ளிவாசல் இயங்காமல் இருந்தது.
இந்நிலையில்,இந்த மாதமுதல் பள்ளிக்கு இமாம் நியமிக்கப்பட்டு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பள்ளிவாசல் உலகம் அழியும் வரை இயங்க ஐந்து நேர தொழுகை நடக்க அந்த நிர்வாகத்தினர் இஸ்லாமிய சமுதாய மக்களை நாடியுள்ளனர்.
இப்பள்ளிக்கு தங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்து இறைவனின் பொருத்தத்தை அடைந்துக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் தொடர்புக்கு:-
9788190945
இப்படிக்கு:-
நிர்வாக சபை
மதரஷத்துல் மஸ்னி வல்மஸ்ஜித் பள்ளிவாசல்,
ஏறிப்புறக்கரை,
அதிராம்பட்டினம்,
பட்டுகோட்டை வட்டம்,
தஞ்சை மாவட்டம்.