‘ஜிஎஸ்டி அமலானதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு வழி வகுக்கும் வகையில் ஏப்ரல் 1ம் தேதியில்🗓 இருந்து இ-வே பில் முறை அமல் செய்யப்பட வேண்டும்’ என மாநில நிதிஅமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது .ஜிஎஸ்டியின் படி ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லும்போது, ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட இ-வே பில்இ ருக்க வேண்டும் என முன்பு அறிவிக்கப்பட்டது . சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தற்போது வந்த செய்தியின் படி,ஏப்ரல் 1ம் தேதி முதல் சரக்குகளை கொண்டு செல்ல இ-வே பில் இணைய தளத்தில் இருந்து இ-வே பில்லை பெறலாம். ரூ.50,000க்கு அதிகமான பொருட்களை இ-வே பில் இல்லாமல்ப திவு செய்தவர்கள் கொண்டு செல்ல முடியாது . இ-வே பில்லை எஸ்எம்எஸ்மூலமும் பெற முடியும்; ரத்து செய்யவும் முடியும். இ-வே உருவாக்கப்படும் போது, பிரத்யேக எண்ஒதுக்கப்படும். இது பொருட்களை விற்பவர், வாங்குபவர் மற்றும் சரக்கு கையாளும் முகமைக்கு தரப்படும்.
மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து- இ-வே பில் அறிமுகம்
180
previous post