Home » பட்டுக்கோட்டையில் ரோட்டரி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் நெடுந்தூர ஓட்ட போட்டி..!

பட்டுக்கோட்டையில் ரோட்டரி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் நெடுந்தூர ஓட்ட போட்டி..!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் இன்று(25/02/2018) காலை 07:00மணியளவில் மனோர ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம், பட்டுகோட்டை ரோட்டரி சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ரோட்டரி தின விழா மாரத்தான், இரத்ததானம், புற்றுநோய் தடுக்க புற்றுநோய் ஒழிப்பு, கண்தானம், போக்குவரத்து விதிகளை மதிப்பது ஆகியவையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் நெடுந்தூர ஓட்டபோட்டி நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர்.எம். பாண்டியன் தலைமையேற்று நடத்தினார்.

இந்நிகழ்வில், உடற்பயிற்சி ஆசிரியர் டீ. ரவிச்சந்திரன் முன்னிலையில், தமிழ்நாடு கால்பந்தாளர்  பயிற்சியாளர் ஆர். இன்பமணி ஒலிம்பிக் தொடரை ஏற்றிவைத்தார்.

 சென்னை முன்னாள் துறைமுக கால்பந்தாட்ட வீரர் எஸ். நல்லதம்பி  அவர்கள் கொடியசைத்து மாரத்தான் போட்டியை துவங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் போட்டியில் பட்டுகோட்டை பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஓடினர்.

ரோட்டரி சங்கத்தின் சார்பில் இன்று நடைபெற்ற மாரத்தான் ஒட்டபோட்டியை ஏற்பாடு செய்த ரோட்டரி சங்க தலைவர்கள் ஏ.எஸ்.வீரப்பன், ஏ.ஆர்.அன்பு, ஹ.ஷேக்நியாஜுதீன், ராதாகிருஷ்ணன்

ஆகியோருக்கு நன்றிகளை தெருவித்து கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டி பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முதல் பட்டுகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வரை நடைபெற்றது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter