Home » அதிரை நகர பேரூர் தமுமுக&மமக புதிய நிர்வாகிகள் தேர்வு..!

அதிரை நகர பேரூர் தமுமுக&மமக புதிய நிர்வாகிகள் தேர்வு..!

0 comment

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் நேற்று(01.03.2018) மாலை அதிரை பேரூர் தமுமுக& மமகவின் முதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி தேர்தல் அதிகாரி அபூதாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமுமுக மற்றும் மமகவின் நகர் தலைவராக சாகுல் ஹமீது, தமுமுக நகர செயலாளராக கமலுதீன், மமக செயலாளராக இதிரிஸ், தமுமுக மமக பொருளாளராக யூசுப் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமுமுக&மமக வார்டு கிளைகளின் புதிய நிர்வாகிகளும் தேர்வுசெய்யப்பட்டனர்.

கீழ் காணும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்::–

பிலால் நகர் தமுமுக & மமக கிளை தலைவராக அசாருதீன், தமுமுக கிளை செயலாளராக இபுராகிம்சா,மமக கிளை செயலாளராக சாகுல் ஹமீது,கிளை தமுமுக & மமக பொருளாளராக சேக்தாவூது ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

அதேபோல்,MSM நகர் கிளையின் புதிய நிர்வாகிகளாக கீழ் கானும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்::-

தமுமுக & மமக கிளை தலைவராக ஹாதில் அஹமது, தமுமுக கிளை செயலாளராக அசாருதீன், மமக கிளை செயலராக ஜைத் இபுராகிம், கிளை பொருளாளராக அப்துல் ஹக்கீம் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.

அதிரையின் மையப்பகுதியின் தமுமுக மற்றும் மமக கிளை தலைவராக அப்துல் அலீம், தமுமுக கிளை செயலாளராக இம்ரான், மமக கிளை செயலாளராக அப்துல் வாஹித்,கிளை பொருளாளராக முஹம்மது ரியாஸ் ஆகியோருர் தேர்வுசெய்யப்பட்டனர்.

அதிரை வடக்கு, பகுதி கிளை நிர்வாகிகள்::-

தமுமுக, மமக வடக்கு பகுதி கிளை தலைவராக சஹித் அஃப்ரிடி, தமுமுக கிளை செயலாளராக இம்ரான் கான், மமக கிளை செயலாளராக அப்துல் வாஹித், கிளை
பொருளாளராக முகம்மது ரியாஸ் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.

இந்த தேர்தலில் தமுமுக & மமக
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அகமது ஹாஜா,மமக மாவட்ட செயலாளர் ஜபருல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் ஷேக் ஹாதி , மாவட்ட பொறுப்புதாரி ஷேக் மைதீன் அகியோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter