Tuesday, February 3, 2026

அதிரை பேரூராட்சியால்  பள்ளி குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்து..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் பள்ளி குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிரை வாய்க்கால் தெரு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடம் பின்புறம் செட்டியா குளம் பழமை வாய்ந்த குளங்களில் ஒன்றாகும்.இந்த குளத்தை சீரமைக்க ரூபாய் 50லட்சம் செலவில் தூர்வாரபட்டது.

ஆனால்,இந்த குளத்தில் 50லட்சத்திற்கு என்ன செய்தார்கள் என்ற சந்தேகம் ஒருபக்கம் இருக்க , மறுபக்கம் அந்த குளத்தை சரியான சீரமைப்பு செய்யாததால் அங்கு காடு போல் மரங்கள் மன்றிகிடக்கிறது.இதனால், தொடக்க பள்ளி வளாகம் உள்ளே பாம்பு போன்ற விஷ பிராணிகள் வரத்தொடங்கின.

அதுமட்டுமின்றி, பள்ளியில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சத்து உணவு தயாரித்து வழங்கும் இடத்திற்க்கு மிக அருகாமையில் கழிவுநீர் வாய்க்கால் திறந்து கிடப்பதால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் அங்கு குழந்தைககுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம் அங்கு பேரூராட்சி நிர்வாகம் சரியான முறையில் கழிவுநீர் வாய்க்கால்களுக்கு மேற் கூரை அமைத்து தராததே ஆகும்.

இதனை தொடர்ந்து, அப்பள்ளியிக்கு தன்னுடைய பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர் ஏனெனில், சத்துணவு என்பது பிள்ளைகளுக்கு ஊட்டத்தை கொடுக்கவே தவிர நோயை கொடுக்க அல்ல.

இதனை தொடர்ந்து, அங்கு அந்த வாய்க்கால் சீறமைக்கப்படுமா..??

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img