கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் நேற்று(27/11/2023) மாலை 6:30மணியளவில் தனது சகோதரனுடன் டியூஷன் சென்று வீடு திரும்பிய அபிஜெல் சாரா என்ற 6 வயது குழந்தையை பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஹோண்டா அமெஸ் காரில் மர்ம கும்பல் ஒன்று கடத்திசென்றுள்ளது.
இந்நிலையில் அந்த மர்ம கும்பலை சேர்ந்த ஒரு பெண் குழந்தையின் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 10லட்சம் ரூபாய் நாளை(28/11/2023) காலை 10மணிக்குள் வேண்டும் என்றும் அப்படி பணத்தை கொடுத்தால் குழந்தையை தங்களின் வீட்டிலேயே வந்து விட்டுவிடுவதாக பேசியுள்ளார். பணம் உடனடியாக கொடுக்க ஒப்புக்கொண்ட பிறகும் அந்த கும்பல் வேறு எந்த தகவலும் கூறலாம் தொலைபேசியை துண்டித்துள்ளது.
தற்பொழுது வரை அந்த மர்ம கும்பல் யாரென்று தெரியாததாலும் குழந்தையை மீட்கும் முயற்சியிலும் கேரளா மாநிலம் முழுவதும் அவசர நடவடிக்கையாக காவல்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுபோன்ற கடத்தல் சம்பவம் கேரளா கொல்லம் பகுதியில் அரங்கேறியது இதுவே முதல்முறையாக உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.
மேலும் குழந்தை குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி கேரளா மாநில காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.