அரசு வேலை வாய்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலரின் கனவாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த அரசு வேலை வாய்ப்பிற்கு தகுந்த பயிற்சி இல்லாததும் ஒரு வகை காரணமே. இதனை ஒழுங்குபடுத்தி பலரையும் அரசு துறை வேலையில் இடம்பெற செய்ய தமிழ்நாடு வக்ப் வாரியம் கடந்த ஆண்டு முதல் UPSC(IAS), SSC, TNPSC ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறது. இப்பயிற்சி இந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம் துவங்கி ஆன்லைன் மூலம் சிறந்த முறையில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த பயிற்சி வகுப்பிற்கு குறைந்த கட்டணமாக Rs.5000/- பெறப்பட்டு பயிற்சியின் இறுதியில் 90% பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைத்தவர்களுக்கு முழு கட்டனமும் Rs.5000/- திருப்பி தரப்படும்.
இப்பயிற்சி திட்டம் பகுதி நேரம் மற்றும் முழு நேரம் போன்ற பல்வேறு சிறப்புகளுடன் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://forms.gle/EjHyCV1PZiQSTDJMA