Thursday, March 19, 2026

பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தஞ்சையில் மாணவ, மாணவிகள் போராட்டம்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை பாரதிய ஜனதா கட்சியினர், ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரான ஹெச். ராஜா, இதனை வரவேற்று, தமது முகநூலில் கருத்துக்களை பதிவு செய்தார். மேலும், தமிழகத்தில் பெரியார் சிலைகளையும் இடிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனால், தேசிய அளவில் பதற்றம் உருவானது. ஹெச்.ராஜாவை கண்டித்து, தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஹெச்.ராஜாவை கண்டித்து, தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்ததோடு, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img