150
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் சாலை விபத்து ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் இன்று (05\04\2018) மதியம் 2.00 மணியளவில் சாலையில் சென்ற பெண்மணி ஒருவர் சாலையை கடக்க முயற்சித்த போது எதிரே வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் இறங்கியது.
இதனால் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகு நேரம் முயற்சித்தும் பலவகை இயந்திரங்களை கொண்டு முயற்சித்தும் லாரியை அகற்ற முடிய வில்லை.வெகு நேர முயற்சிக்கு பிறகு JCB யின் உதவியை கொண்டு லாரியை அகற்றினர்.