Sunday, February 1, 2026

அதிரையில் நாம் மனிதர் கட்சி சார்பில் இலவச ஸஹர் உணவு.,முன்பதிவு செய்ய அழைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் இன்னும் ஓரிரு தினங்களில் ராமலனுடைய நோன்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நோன்பு நேரங்களில் இஸ்லாமியர்கள் பொதுவாகவே அதிகாலை சுமார் 3:30மணிமுதல் ஸஹர் உணவு(நோன்பு வைப்பதற்கு முன் உண்ணும் உணவு) சாப்பிடுவார்கள்.

இதே போல் தமிழகத்தில் முழுவதும் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் ஏராளம்.

இந்நிலையில், பல இஸ்லாமியர்கள் வெளியூர்களில் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஸஹர் உணவு ஏற்பாடுகளை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய இயக்கங்களும் செய்து வருகிறது.

இதேபோல்,தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நாம் மனிதர் கட்சி சார்பில் நோன்பின் ஆராம்பம் முதல் இறுதி வரை இலவசமாக உணவு வழங்கும் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதற்க்கு முன்னர் அதிரை தக்வா பள்ளிவாசலில் இலவச உணவு வழங்கும் நிலையில் இரண்டாவதாக ஸஹர் உணவு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியின் அறிவிப்பு:-

புனித நோன்பு ஆரம்பம் முதல் இறுதி வரை இலவசமாக ஸஹர் உணவுகள் வழங்கப்படஉள்ளதாகவும், ஸஹர் உணவுக்கான பதிவு டோக்கன்களை பெற்று உணவு அருந்திக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளனர்.
ஸஹர் உணவு ரமலான் மாதம் முழுவதும் 2:30மணிமுதல் 04:00மணிக்குள் வருகை தந்த அருந்திக்கொள்ளவும் அறிவித்துள்ளனர்.

டோக்கன் வழங்கப்படும் இடம்:- ஹயாத் ரெஸ்டாரண்ட்,NKS சவுண்ட் சர்வீஸ் அருகில், SBI பேங்க் அருகே, அதிராம்பட்டினம்.
செல்:-9952132598

ஸஹர் உணவு வழங்கப்படும் இடம்:- நாம் மனிதர் கட்சி அலுவலகம், மெயின் ரோடு, பேருந்து நிலையம், அதிராம்பட்டினம்.
தொடர்புக்கு:-9786747606,7550345564,7402507622

குறிப்பு:-

ஜாதி, மத, மொழி வெறி இல்லாமல்
ஆதமின் மக்களான மனித குலத்தில்
தேவையுடையோருக்கு தாண, தர்மம் செய்ய நினைப்போர் மட்டும் நாம் மனிதர் கட்சி அலுவலகம் அணுகி
பொருள் உதவி செய்யலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img