தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டை சாலையில் கடந்த சில நாட்களாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இன்னிலையில் (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை (இன்று) மாலை 6.00 மணியளவில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள மது கடையிலிருந்து N. K. S மைக் சர்வீஸில் பணிசெய்யும் ஆறுமுகம் (என்கிற) ரபீக் அவர்கள் மது வாங்கிக்கொண்டு வரும்பொழுது எதிர்பாரா விதமாக அந்த சாலையில் வந்துக்கொண்டிருந்த கொக்லைன் வாகனம் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் மூளை நசுங்கி உயிரிழந்தார். அவர் வாங்கி வந்த மது பாட்டில் உடைந்து அவர் வைத்துக்குள் சொறிகியது.
இதன் பிறகு த. மு. மு. க. அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
விபத்துக்குள்ளாக்கிய பொக்லைன் ஓட்டுனரை அதிரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த சாலையில் உள்ள மதுக்கடையினால் இதுவரை பல விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த மதுக்கடையை மூடக்கோரி பலமுறை கூறியும் காவல்துறையும், மற்ற கட்சி அமைப்புகளும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து கட்சி அமைப்புகளும் அனைத்து மத அதிரை மக்களும் சேர்ந்து போராட்டங்கள் நடத்தி அதிரையில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கு மேலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் இன்னும் பல உயிரிழப்புகள் நடக்கும் என்பதை உறுதியோடு கூறலாம்.
ஆதலால் இதை கருத்தில் கொண்டு அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.