85
மக்காவில் உள்ள மஸ்ஜித் ஹரம் ஷரீஃபில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.கட்டுமான பணி நடைபெறுவதால் அப்பகுதியில் தொழுகுவதற்கு அனுமதி இல்லை.
இந்நிலையில் இன்று (20/05/2018) ஞாயிற்று கிழமை 2 மணியளவில் ஹரம் ஷரீஃபில் கட்டுமான பணி நடைபெற்று இருந்த போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து கேட் எண் :160 மூன்றாம் பிரிவு பகுதியில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த கிரேன் ஓட்டுநர்க்கு சிறிய காயம் ஏற்பட்டது.
இதை போன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேன் விழுந்து பொதுமக்கள் மரண அடைந்தனர் என குறிப்பிடத்தக்கது.