Home » முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது SDPI கட்சி புகார் மனு….!

முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது SDPI கட்சி புகார் மனு….!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை நகர SDPI கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் மனு.

முத்துப்பேட்டையில் கடந்த 20.6.2018 அன்று பாஜக எச்.ராஜா தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தனர்.ஆனால் அமைதியாக இருக்கும் நிலையில் இதுபோன்ற போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அன்றைய தினம் காலையில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட பலரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது காவல்துறை.

இந்நிலையில் முருகானந்தம் பேட்டியளிக்கும் போது SDPI கட்சியை தீவிராதத்துடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.இதனை கண்டித்து 22.6.2018 அன்று SDPI கட்சியின் நகர தலைவர் S.பாட்ஷா காவல்துறை ஆய்வாளரிடம் SDPI கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் அவதூறாக பேசிய கருப்பு முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே வேறொரு கூட்டத்தில் முருகானந்தம் பேசும் போது திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை புடுங்க முடியாதா என்று தரக்குறைவாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter