104
திருவாரூர் – காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை சோதனை முறையில் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டுக்கோட்டை – திருவாரூர் வரையிலான ரயில் பாதை பணிகள் மற்றும் ரயில் நிலைய பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் அதிரை வழித்தடத்தில் புதிதாக போடப்பட்ட அகல ரயில் பாதையில் சரக்கு ரயில் வருகை தந்தது. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிரை வழித்தடத்தில் வருகை தந்த ரயிலை அதிரையர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.