Sunday, February 1, 2026

டை பிரேக்கர் : பட்டுக்கோட்டையை விரட்டிய நாகூர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் கௌதியா 7s நாகூர் – விவேகானந்தா பட்டுக்கோட்டை அணிகள் மோதின.

முன்னதாக கீழத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

ஆட்டம் ஆரம்பித்ததும் அரையிறுதிக்கு செல்லும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் பரபரப்புடன் பந்தை துரத்தினர்.

இருந்த போதிலும் நாகூர் அணியினரின் கால்களிலே பந்து சுழன்று கொண்டிருந்தது.

எனினும் கடைசி வரை இரு அணியாலும் கோல் ஏதும் போட முடியாமல் சமநிலையில் ஆடி முடித்தன.

இதனால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த டை பிரேக்கரில் நாகூர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பட்டுக்கோட்டைக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்க விடாமல் விரட்டியது.

இப்போட்டியில் நாகூர் அணியினருக்கே ரசிகர்களின் ஒருமித்த ஆதரவு இருந்தது குறிப்பிடதக்கது.

நாளைய தினம் SSMG அதிரை – தென்னரசு பள்ளத்தூர் அணிகள் மோதுகின்றனர்.

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img