22
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர்.இந்த முகாமில் கண் சம்மந்தமான அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
கண் சம்மந்தப்பட்ட மேல் சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் இலவச வசதிகள் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.
இந்த முகாமில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் கலந்துகொண்டனர்.
முகாமின் மூலம் 430க்கும் மேற்பட்டோர் தங்களின் கண்களை பரிசோதித்து கொண்டனர்.